நெதர்லாந்தில் நடைபெற்ற தமிழீழத்தேசிய மாவீரர் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி

 நெதர்லாந்து தமிழர் தவகல் மையமும்  நெதர்லாந்து விளையாட்டு ஒன்றியமும் கடந்த பல ஆண்டுகளைப்போல் இணைந்து  சிறப்பாக நடாத்தியிருந்தது. காலை 10:30 மணியளவில் பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடிகளேற்றல்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வு, ஏப்ரல், மே மாதங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட  பிரிகேடியர் சசிகுமார் , பிரிகேடியர் சொர்ணம் , பிரிகேடியர் பால்ராஜ்  , கேணல் ரமணண் உட்பட  மாவீரர்களுக்குமான வணக்க நிகழ்வுகளுடன்   உதைபந்தாட்டப்போட்டிகள்  விறுவிறுப்பாக நடைபெற்றன. இறுதியில்,


 இவ்வாண்டின் முதல் வெற்றிக்கிண்ணத்தை TFC denhelder விளையாட்டுக் கழகமும்


2ஆம் வெற்றிக்கிண்ணத்தை  TFC YMTA விளையாட்டுக் கழகமும்


3ஆம் வெற்றிக்கிண்ணத்தை   TFC Schagen விளையாட்டுக் கழகமும்                                                


பெற்றுக் கொண்டன.


மக்களின் ஆரவாரத்துடன் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டிகளில், வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வெற்றிப் பதக்கங்களும் வழங்கப்பட்டு, பின் தேசியக் கொடிகள் கையேற்றலைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் எமது நிரந்தரமான அரசியல்தீர்வான    "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற மக்கள் அனைவரினதும் கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.