மக்கள் பிரதிநிகளுக்கும் நீதி கோரும் உரிமை இருக்கிறது !

 


மாமனிதர் சிவராம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நீதிகோரிய கண்டன போராட்டத்தின் போது கலந்துகொண்டவர்களை படம் எடுத்த பொலிஸ் அதிகாரி யின் செயல் குறித்து எதிர்வினையாற்றிய பாராளமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது

பொலிஸ் அதிகாரிகள் யாரும் போராடும் மக்களை எப்படி போராடுவது என வகுப்பெடுக்க முடியாது.
குறிப்பாக கடந்த காலங்களில் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் தொழிலுக்குரிய நெறிமுறைகளிற்கு ஏற்ப ஒரு போதும் நடந்து கொள்ள வில்லை
வடக்கு கிழக்கில் நடைபெற்ற பல கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தப்ப வைத்ததன் பின்னணியில் பொலிஸ் அதிகாரிகளே செயல்ப்பட்டு இருக்கின்றார்கள்
இது மாத்திரமின்றி அமைதி வழி நடந்த பல போராட்டங்களின் போது பொலிஸ் அதிகாரிகள் எடுத்த படங்கள் துணை கொண்டு போராட்டங்களில் பங்குபற்றிய பலர் வேட்டையாடப்பட்டு இருக்கின்றார்கள்
குறிப்பாக திருகோணோமலையில் 5 மாணவர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சுகிர்தராஜன் அவர்கள் பொலிஸ் அதிகாரிகள் வசம் இருந்த அவரின் படத்தை வைத்தே அடையாளம் காணப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருந்தார்
இதே போல நூற்றுக்கணக்கான படுகொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களுக்கு பொலிஸ் அதிகாரிகள் எடுத்த படங்களை இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர் பயன்படுத்தி இருக்கின்றார்கள்
இது மாத்திரமின்றி இன்றும் வடக்கு கிழக்கில் அமைதி வழி நடைபெற்று வரும் காணாமலாக்கப்பட்டோர தொடர்பான போராட்டம் முதல் நில மீட்பு போராட்டங்கள் என சகல ஜனாயக போராட்டங்களின் போதும் பொலிஸ் அதிகாரிகள் படங்கள் எடுப்பதும் அச்சுறுத்துவதும் தொடர் நிகழ்வாக நடைபெற்று வருகின்றன
கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட P2P போராட்டத்தின் போதும் பல இடங்களில் பொலிஸ் அதிகாரிகள் படம் எடுப்பதும் அச்சுறுத்துவதும் தொடர் நிகழ்வாகவே நடைபெற்று இருந்தது
சில நாட்களுக்கு முன்னர் கூட காலிமுக திடலில் நடைபெற்று வரும் போராட்டங்களை படம் எடுத்த பொலிஸ் புலனாய்வு அதிகாரி வெளியேற்றப்பட்டு இருந்தார்
இந்நிலையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொலிஸ் அதிகாரி மீது எதிர்வினையாற்றிய சம்பவம் முக்கியமானது
குறைந்த பட்சம் பாராளமன்ற உறுப்பினர் எதிர்வினையாற்றிய காரணத்தினால் தான் மேற்குறித்த நிகழ்வு செய்தியாகி இருக்கின்றது
யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகளுக்கு பின்னரம் கூட அமைதி வழி போராடும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அம்பலமாகி இருக்கின்றது
இந்த நாட்டில் ஊடகவியாளர்கள் உட்பட பலரை படுகொலை செய்த கோட்டாபய ராஜபக்ஷே அவர்கள் தான் ஜனாதிபதியாக இருக்கின்றார்
கிழக்கில் பத்திரிகையாளர் நடசேன் உட்பட பலரை கொன்று போட்ட பிள்ளையான் இராஜாங்க அமைச்சராக இருக்கின்றார்
வடக்கில் பத்திரிகையாளர் நிமல்ராஜன் உட்பல பலரை வேட்டையாடிய டக்ளஸ் தேவானந்தா இன்றும் அமைச்சராக இருக்கின்றார்
ஆனால் இவர்களால் பாதிக்கப்பட்ட எந்த ஊடகவியலாருக்கும் நீதி கிடைக்க வில்லை . பல சந்தர்ப்பங்களில் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்ட போதும் குறித்த கொலையாளிகள் இலங்கை நீதித்துறை மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் தப்ப வைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
ஆகவே மக்களுக்கும் மக்கள் பிரதிநிகளுக்கும் நீதி கோரும் உரிமை இருக்கிறது
இந்த உரிமைமையை கேள்விக்கு உட்படுத்தும் பொலிஸ் அதிகாரிகள் மீது எதிர்வினைவையாற்றும் உரிமை
பாராளமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.