மீன்வளம் வீழ்ச்சியடைந்து இருக்கிறது

 


இலங்கையில் களப்பு பிரதேசங்கள் கூடிய மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தில இருக்கிறது

அந்த வகையில் வாகரை வாவி இயற்கை வளங்களை அதிகமாக கொண்டு காணப்படுகின்றது.
பனிச்சங்கேணி ஆற்றினை அண்டியதாக இருக்கும் குறித்த பகுதியானது, இயற்கை வனப்பு கொண்ட பகுதி மட்டுமல்லாமல்,
வெள்ள காலத்தில் வெள்ள நீரை வெளியேற்றும் சதுப்பு நிலமாகவும் காணப்படுவதுடன், அதிகளவான வெளிநாட்டு பறவைகள் கூடும் பறவைகள் சரணாலயமாகவும் காணப்படுகின்றது.
இப்பகுதியில் சுமார் மூன்று மேய்ச்சல் தரை பகுதிகள் காணப்படுவதுடன், அப்பகுதியில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்று வருகின்றன
இது மாத்திரமின்றி இறால் மற்றும் மீன் உற்பத்தி அதிகமாக உள்ள மேற்குறித்த இடத்தில உள்ளூர் மீனவர்கள் ஒவ்வருவரும் நாளாந்தம் 3000 ரூபாவிற்கும் அதிமான வருமானம் பெற்று வருகின்றார்கள்
அதே நேரம் குறித்த பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபடும் உள்ளூர் மக்களுக்கான நீர்ப்பாசனம் கூட மேற்படி நீர்ப்பரப்பில் இருந்தே பெறப்படுகின்றது
இந்நிலையில் குறித்த பகுதிகளை உள்ளடைக்கிய 3800 ஏக்கர் காணிகளை நன்னீர் இறால் பண்ணை அமைப்பதற்காக தனியார் சிலரிடம் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகளை செய்கின்றார்கள்
ஆனால் சாதாரண மக்கள் இறால் பண்ணை அமைக்கப்படுவதால், கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும் என அச்சப்படுகின்றார்கள்
அதே போல வீச்சு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் தாங்கள் நெருக்கடிகளை சந்திப்பார்கள் என சொல்லுகின்றார்கள்
அதாவது இறால் பண்ணையின் மூலம் வெளியாகும் நச்சுப்பதார்த்தங்கள் உப்பாற்றில் கலக்கும் நிலைமை ஏற்படும் என அஞ்சுகிறார்கள்
இதன் காரணமாக இறால் முட்டைகள் அழிவடையுமென்பதுடன், தங்கள் இறால் பிடிக்கும் தொழில் கூட பாதிக்கப்படும் என பதறுகின்றார்கள்
இது போதாதென்று நச்சுத் தண்ணீர் ஏனைய இடங்களுக்கும் பரவி புல்பூண்டுகள் முளைக்காத நிலைமை ஏற்படும் என கூறுகின்றார்கள்
கடற்கரையோரங்களில் வளரும் கண்டல் தாவரங்களும் அழிவடையும் என பயப்படுகின்றார்கள் . இதன் காரணமாக சுமார் 8000ற்கு மேற்பட்ட மக்கள் நேரடியாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்படகூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
அதே நேரம் இறால் பண்ணைக்கான போதிய நிலம் இல்லாத நிலையில் காடுகளை அழிப்பதன் மூலம் மட்டுமே போதிய இறால் பண்ணைக்கு தேவையான நில பரப்பை பெற்று கொள்ள முடியும் என மக்கள் குற்றம் சொல்லுகின்றார்கள்
அதாவது மேற்குறித்த இறால் பண்ணை காரணமாக களப்பு மீன்பிடி, விலங்கு வேளாண்மை , சேனை பயிர்ச்செய்கை, காடழிப்பு இயற்கை சமநிலை பாதிப்பு என ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் சிதைக்கப்படும் என மக்கள் அஞ்சுகிறார்கள்
இலங்கையில் ஏலவே உள்ள இறால் பண்ணைகள் பெரிய அளவில் சாதனைகளை படைக்க வில்லை . மாறாக புத்தளம் உட்பட பகுதிகளில் இயற்கை சமநிலைக்கு ஆபத்துகளை உண்டாக்கி வருகின்றன
இது மாத்திரமின்றி இந்தோனேசியா, இந்தியா, வியட்நாம் போன்ற பல நாடுகளும் இறால் பண்ணைகள் மூலமான வர்த்தகத்தினால் பெறுமதியான வளங்களை இழந்து வருவதாக ஏற்று கொண்டு இருக்கின்றன
குறிப்பாக இந்தோனேசியாவில் இறால் பண்ணைகள் கண்டல் வனங்கள், சதுப்புகளிலிருந்து இடையறாது நீரைக் கணக்கின்றி உறிஞ்சியெடுத்ததன் விளைவாகப் பிச்சாவரம்-கிள்ளை உவர்நீர்ப் பரப்புகள் சுருங்கிப் போய் இருக்கின்றன
இறால் பண்ணைக் கழிவுகளை இந்நீர்நிலைகளிலும் கடலிலும் கலக்கவிட்டதால் மீன்வளம் வீழ்ச்சியடைந்து இருக்கிறது
அங்கு வலைவீசும் மீனவர்கள் தோல் நோய்ப் பாதிப்புகளுக்கு உள்ளாஇ இருக்கின்றார்கள்
கடற்கரைச் சமூகங்கள் கடலுக்குச் செல்லும் பொதுப்பாதைகள் மறிக்கப்பட்டதால் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித் தொழிலைத் தொடர்வதிலும் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது
அதேபோல தமிழ்நாட்டில் இறால் பண்ணனைகளால்
அருமையான
விளைச்சல் தந்துவந்த நிலங்கள் மேல்மண் உவர்ப்பாகி விவசாயத்துக்குத் தகுதியற்றுப் போய்விட்டன.
குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது
வேளாண் நிலங்களில் உவர்நீர் ஏற்றத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்து இருக்கின்றது
இலங்கையின் புத்தளம் பகுதியில் நிலத்தடிநீர் மாசடைந்துள்ளமைக்கு இறால் பண்ணைகள் ஒரு காரணம் என சொல்லுகின்றார்கள்
வங்கதேசக் கடற்கரைகளில் வாழும் பெண்களுக்குக் கருப்பை நீக்கு சிகிச்சைகள் மிக அதிக எண்ணிக்கையில் நிகழ்வதாக ஒரு ஊடகர் தனது ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.
கடலோர உவர்நீர் இறால் பண்ணைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் தோல் நோய்தான் கருப்பைக் கோளாறுகளுக்குக் காரணம் எனக் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையில் வாகரை பகுதி மக்களின் அச்சம் நியாயமானது .
தங்கள் வாழ்வாதாரங்கள் குறித்த அவர்களின் அச்சம் புரிந்து கொள்ள கூடியது
அறிவுப்பூர்வமாக அணுக வேண்டிய இந்த விவகாரத்தில் பிள்ளையான் கும்பலின் அரசியல் தலையீடுகள் பொதுமக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன
இயற்கை வளத்தை காப்பதன் மூலம்தான் மனிதவளத்தை நிலைநிறுத்திக்கொள்ளமுடியும் என்பதுதான் சூழலியல் அறிவியலின் தத்துவம்.
பொருளாதார அபிவிருத்தியின் அடிப்படையே இது தான் .
ஆனால் அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து தனியாருக்கு இறால் பண்ணைகளை ஒதுக்கி குறித்த பகுதி மக்களை இறால் பண்ணைகளில் கூலியாளாக வேலைக்கு அனுப்பி அபிவிருத்தி என சொல்லுவதை எப்படி புரிந்து கொள்ள முடியும் ?
இதுவா அபிவிருத்தி ? இதுவா வேலைவாய்ப்பு ?
கல்வியறிவற்ற அரசியல்வாதிகளாக அடையாளம் காணப்படும் கிரிமினல்கள் கையில் சிக்கி இருப்பதால் அதிகாரிகளும் பேச முடியாத இடத்தில இருக்கின்றார்கள்
இது பற்றி ஆய்வுகளை முன்வைக்க வேண்டிய இடத்தில இருக்கும் கிழக்கு பல்கலை கழகம் என்ன செய்கின்றது என்றே தெரியவில்லை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.