சிறீலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயம் - அமர்வு.3 


20 - 22 மே 2022 பேர்லின், யேர்மனி


அமெரிக்காவின் அழுத்தத்தில், தவிபு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக அமைந்ததா?


மே 2006 இல் - சிறிலங்காவில்  சமாதான முன்னெடுப்புகளுக்கான முக்கிய ஆதரவை வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம் - ஒரு தரப்பைத் தடை செய்ததன் (தவிபு) மூலம், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருதரப்புகளுக்கும்  வழங்கப்பட்ட ‘சமநிலையை’ இல்லாதொழித்தது. நான்காண்டு காலம் நீடித்த அமைதி முன்னெடுப்பைச் செயலிழக்கச் செய்வதை நோக்காகக் கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் திட்டமிட்ட அழுத்தத்தை மேற்கொள்ளவும், அதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் தவிபு களைத் தடைசெய்யவும் அதனைத் தொடர்ந்து ஓர் இனவழிப்புப் போர் கட்டவிழ்த்துவிடுவதற்கான தூண்டுதல் வழங்கப்பட்டதா? என்பதை தீர்ப்பாயத்தின் இந்த மூன்றாவது அமர்வு ஆய்வு செய்ய இருக்கிறது


இது நடந்ததா இல்லையா என்பதற்கு அப்பால்  அப்படி நடந்திருந்தால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் நோக்கங்கள் என்னவாக இருந்திருக்கும் என்பதை நிறுவ பேர்லின் அமர்வு இது தொடர்பான விடயங்களை நுணுக்கமாக ஆராயும்.


🔴2006ல் விதிக்கப்பட்ட தவிபு மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை 'அமைதிக்கு எதிரான குற்றமா'?


🔴நியூரன்பேர்க்  தீர்ப்பாயத்தில் அங்கம் வகித்த  வழக்கறிஞர், 'அமைதிக்கு எதிரான குற்றத்தை' மிக முக்கியமான குற்றம் என்று விவரித்தார், அதில் முழுப் போரினதும்  (போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள்) அழிவுகள்  அடங்கியுள்ளன. இந்த நிலையில், 2006 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தவிபு மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையானது, அமெரிக்காவின் கடும் அழுத்தத்தின் கீழ், தீவில் நடந்த பாரிய படுகொலைகளுக்கும் தற்போதைய சிறிலங்காவின்  நிலைமைக்கும் காரணமான ஓர்  செயலா? அப்படியானால், அமைதிக்கு எதிரான இந்தக் குற்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய முதன்மையான செயற்பாட்டாளர்கள் யார்?


🔴சிறிலங்காவில்  அமெரிக்க இராணுவமானது தனது தளத்தை அமைப்பதற்காக  ஈழத்தமிழர்கள் பலியாக்கப்பட்டார்களா ?


🔴சிறிலங்காவில் நடைபெற்ற  சமாதான முன்னெடுப்புகளின் போது தவிபு களை அழிக்கவேண்டுமென்ற  அமெரிக்காவின் கொள்கையும்  சிறிலங்கா மீதான  தற்போதைய இராணுவ ஈடுபாடும், சிறிலங்காவை குறிப்பாக தமிழர்கள் வாழும் திருகோணமலைப் பகுதியின்  துறைமுகத்தை அமெரிக்க இராணுவச்  சொத்தாகப்  பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தினால் தூண்டப்பட்டதா? அமெரிக்க இராணுவமானது  திருகோணமலையில் நிலைகொண்டிருப்பது பூகோள அமைதிக்கும் நீதிக்கும் அச்சுறுத்தலா?


🔴The USS John C.Stennis ( படம்) Feb - 2019. In Dec - 2018, Jan- 2019 இல், 30 ஆண்டுகளில் அமெரிக்காவின் முதல் Nimitz ரக விமானம் தாங்கி கப்பல், திருகோணமலை மற்றும் கொழும்பில் அமைக்கப்பட்ட தளவாட மையங்களுக்கான  சேவையில் ஈடுபட்டது . "இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கம், இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் மற்றும் இயங்கும் அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு முக்கியமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதாகும்."


 மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வேளையில் அதனைக் கட்டுப்படுத்துவது யார் என்ற மோதல், பூகோள-அரசியலைக் கையில் வைத்திருக்கும் இருபெரும் தரப்பிற்கிடையே ஏற்படுவதை நாம் காணுகின்ற இவ்வேளையில் நடைபெறும் இத்தீர்ப்பாயத்தில் இடம்பெறுகின்ற விவாதங்கள், தாயகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு பல சிறந்த கற்பிதங்களைத் தரவல்லதாகும் மேலும்.  பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததனால் உக்கிரையினில் உருவான கொடூரமான போ உலகின் முன் சாட்சியாக இருக்கும் இவ்வேளையில், பேர்லினில் நடைபெறுகின்ற தீர்ப்பாயமானது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், சமாதானத்தை விரும்புகின்ற அனைவருக்கும் பயன்தரக்கூடிய நிகழ்வாக அமையும்.


 நடைபெறவிருக்கும்  தீர்ப்பாயத்தின் மூன்றாவது அமர்வும்  - டப்ளின் (https://pptsrilanka.org/) மற்றும் பிறேமன்  (https://www.ptsrilanka.org/) அமர்வுகள் போல, நிரந்தர மக்கள்  தீர்ப்பாயத்தின் கீழ் நடைபெறும். (https://permanentpeoplestribunal.org). முந்தைய அமர்வுகளைப் போலவே  இலங்கையில் அமைதிக்கான ஐரிஷ் மன்றம்’  'Irish Forum for Peace in Sri Lanka'– டப்ளின் மற்றும்  சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு - 'Internationaler Menschenrechtsverein Bremen'பிறேமன்   (https://humanrights.de/) ஆகிய அமைப்புகளே இத்தீர்ப்பாயத்தையும் நடாத்துகின்றன.


தீர்ப்பாயத்தின் முதல் இரண்டு அமர்வுகளின் முடிவுகளை வெளியுலகிற்குக்  கொண்டு வருவதற்கான எங்கள் முயற்சிகளை  இலத்தீன் அமெரிக்காவில் உள்ள பூர்வகுடி மக்களே செயற்படுத்தினார்கள். குறிப்பாக ஈக்குவடோர் நாட்டில் உள்ள பூர்வகுடிமக்கள் இதன்பால் ஈர்க்கப்பட்டு, எமக்கு  ஊக்கமளிக்கும் வகையில் எம்மோடு இணைந்து நின்று செயற்பட்டனர். இந்த உண்மையின் பிரதிபலிப்பாகவே பெர்லினில்  நடைபெறப்போகும் அமர்விற்கான நீதிபதிகள் குழு உருவானது.


 நீதிபதிகள் குழு :


1️⃣ Denis Halliday (ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிச் செயலாளர் மற்றும் அமைதிக்கான காந்தி விருது பெற்றவர்)


2️⃣ Javier Giraldo Moreno  (நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் துணைத் தலைவர் மற்றும் கொலம்பிய விடுதலை இறையியலாளர். இலத்தீன் அமெரிக்காவின் முக்கிய மனித உரிமை ஆர்வலர்.)


3️⃣ Ana Esther Cesena (இலத்தீன் அமெரிக்க புவிசார் அரசியல் ஆய்வகத்தின் இயக்குநர் மற்றும் மெக்சிக்கோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர்)


4️⃣ Flavia Carvalho  (பிரேசிலிய உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் ஆபிரிக்க - பிரேசிலிய பெண்ணியவாதி)


5️⃣ Lourdes Esther Huanca Atencio  (பெண் விவசாயிகள், கைவினைஞர்கள், பூர்வீகக் குடிகள்  மற்றும் பெரு நாட்டின்  ஊதியம்  பெறும் தொழிலாளர்களுக்கான  தேசிய கூட்டமைப்பின் தலைவர்)


6️⃣ Feliciano Valencia  (முன்னாள் கொலம்பிய செனட்டர், கௌகா  பிராந்தியத்தின் நாசா பூர்வகுடி மக்களின் தலைவர் )

 

7️⃣ Na'eem Jeenah  (தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க -மத்திய கிழக்கு மையத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் இசுலாமிய  இளைஞர் இயக்கத்தின் முன்னாள் தலைவர்)


8️⃣ Liza Maza (சர்வதேச மக்கள் போராட்டக் கழகத்தின் (ILPS) பொதுச் செயலாளர் மற்றும் பிலிப்பைன்சு  பிரதிநிதிகள் சபையின் முன்னாள் உறுப்பினர்)


9️⃣ Lonko Juana Culfunao Paillal ( சிலி நாட்டின்   மாபுச்சே பூர்வகுடி சமூகத்தின் தலைவி, தனது மக்களின் இறையாண்மைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு, சித்திரவதைக்கு எதிரான நெறிமுறை ஆணையத்தை நிறுவியவர்.)


🔟 Junaid S.Ahmad ( இசுலாம் மற்றும் காலனித்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் மற்றும் பாலஸ்தீன ஒற்றுமைக் குழுவின் நிறுவுனர் மற்றும் தலைவர் -  இசுலாமாபாத்;, பாகிஸ்தான்)


1️⃣1️⃣ Gianni Tognoni ( நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் பொதுச் செயலாளர் - ரோம், இத்தாலி )


இத்தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஆரம்பித்து சனி, மற்றும் ஞாயிறு தினங்களில் தொடர்ந்து நடைபெறும்.


Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.