மே மாதம்...!


ஓ தமிழா 

ஒருதரம் கேள்!

ஓ மானிடா

வலியினை மீள்!

இது

கொண்டாடுவதுக்கும்

கூத்தாடுவதற்குமான

திங்களல்ல!

ஆண்டுக்கொருமுறை

என்றாலும்

அவலங்களை நினைத்து

உலகிற்கு உணர்த்தும் மாதம்!


எளிதில் மறந்துபோவதற்கு

பழிதீர்தவனின் பாவங்கள்

கொஞ்சமுமல்ல!

வலியின் நீதியில்

விடுதலைக்கதவு

திறக்கவுமில்லை!


தமிழனாக இருந்தால்

இனத்தின் வலி ஆழமாக

இருக்கவேண்டும்!

கருவில் கூட தமிழ் குழந்தையை

சிதைத்தவனை

உயிர் போகும்வரைக்கும் மறவாது

நடக்கவேண்டும்!

அறத்தினை உதிரத்தில் ஊற்றி

நீதிக்காக நிமிரவேண்டும்!


விதியென வீழ்ந்துபோக

நாமொன்றும் ஈசல்கள் அல்லவே!

சதிகளைக் கடந்துபோக

எமக்கான நீதி கிட்டவில்லையே!

மதிகளைத் திரட்டுவோம்

எதிரிகளை இன்னும் பொருளாதார

நெருக்கடியில் இறுக்குவோம்!


தமிழின அழிப்பால் சிறீலங்கன்

உணவுக்கு அலையிறான்!

தாழ்நிலையில் இருப்பதால் சிலதமிழன்

கால்களை கழுவுறான்!


வீரக்கொடி வீணென நினைத்து வீணர்கள்

வீங்கி வெடிக்கிறார்!

மானத்தமிழரோ ஆரத்தழுவி

உணர்விலே இன்னமும் இருக்கிறார்!


இது

வலி சுமந்த மாதம்

ஆதலால்

காயத்தில் ஈட்டியை ஏற்றாது

நியாயத்தின் நீதிக்காய் நில்!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.