வலிமைத்திங்கள்...!!


வலிசுமந்த மாதத்திற்கு

வலிமையுண்டு!

தலைவனின் முடிவில்

தீர்கதரிசனமுண்டு!

விலைமதிக்க முடியா

விதைகளின் உதிரத்தில்

உண்மையுண்டு!

சதைசதையாய் நீ கிழித்தவரின் 

கனவுகளில் கனதியுண்டு!

இனவாத அரசில்

பயங்கரவாதமுண்டு!

இதை நீ இன்றாவது

உணர்வாயானால்

இதயம் சிலிர்க்கும்

உனைக்கண்டு!


தமிழனின் நிலையே

காலியில் உனக்கின்று!

எம் தலைகளை கொய்யும்போது

உன் தலைவனின்

கவசமன்று!


வடகிழக்கு

தமிழன் பூர்விகநிலமென்று

இனவாதக் கதவுடைத்து

நீ வந்தாலுண்டு

ஒருபோதும் தளராத

பொருளாதார பலம் மீளும் மீண்டும்!


எம் மக்களின் மண்டையில்

கொட்டிய கந்தகத்தால்

கடன் நாடாய் ஆகியே

இன்று நீ உணவுக்கு திண்டாட்டம்!


அட

இனியாவது

இரண்டு நாடாகிப் போனால்

உலகத்தின் விளையாட்டில்

கலகத்தை தவிர்கலாம்!

இல்லை இனவாதமே

தீர்வென்றால்

உன் அடுப்பில் அவியாது

அடுததவேளை

உணவு!


எங்களிடம் பொருளாதார

பலமுண்டு

இதை நீ உணர்ந்தால்

உலகத்தில் உனக்கும்

வாழ்வுண்டு!

இதை உதாசீனம்

செய்தால் நீயும்

அடுத்தவனுக்கு

அடிமையாய் போகும்

நாளுண்டு!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.