அடேய் சிங்கள நண்பா..!!
அங்கு தொட்டு, இங்கு தொட்டு, அடிமடிக்குள் கைவைத்த கதையாய் போனதா உனது நிலையும் ???
உன்னவனே உன்னையும், உன் உரிமைகளையும் மதிக்காமல், உனை மிதிக்கும் நிலை வந்துவிட்டதல்லவா ??
சொந்த மொழி பேசியவனுக்கே இந்த நிலையெனில், சிந்துவெளிக்காரனுக்கு எப்படி இருந்திருக்கும் என யோசி....
83 யூலை கலவரத்தின் போது, காடையர்கள் தமிழர்களை குறிவைத்து தாக்க, அவர்களிடமிருந்து எம்மில் பலரை காப்பாற்றி அனுப்பிவைத்த சிங்கள மனிதநேயத்தவர்கள் பலருண்டு. ஆதலால் எமது கோபம் உங்கள் மொழி பேசுபவர்களிலல்ல.
மனிதம் தெரியாமல், உன்னை இன்று அடக்க நினைக்கும் ஆட்சிக்காரர்கள் தான் எங்களுக்கும் எதிரிகள்.
இராமனை நல்லவனாய் காட்ட இராவணனை கெட்டவனாய் காட்டிய அதே பாரதத்திடம் பிச்சை வாங்கும் உன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடு,வாசல்,வாகனங்களை ஒருதடவை உற்றுப்பார். எங்கள் நாட்டின் அரசியல் தெரியும். இராவணன்களை கெட்டவர்களாக காட்டிக்காட்டியே உங்களை ஏமாற்றிய அதிகார வர்க்கம் தன் அதிகாரத்தை தக்க வைக்க உன்னையும் கொல்லும்.
அன்று நீ அறியக்கூடும் எம்மவர்க்கு அளிக்கப்பட்ட அநீதியின் கனத்தை......
மே மாதம் எங்களுக்கு பழகிப்போச்சு
உங்களுக்கும் பழகிப்போகும்...
தென்னிலங்கையில் வாழும் நிலை அற்றுப்போனால்,
வாடா வடக்கு நோக்கி....
ஒரு வேளை கஞ்சியும்
ஓலைப்பாயில் தூக்கமும்
இராவணனின் உண்மைக்கதையும்
தாராளமாய் இருக்கு....
-ஐங்கரன்-
கருத்துகள் இல்லை