நாங்கள் 90’ஸ் கிட்ஸ்!!இப்போ உள்ள 2K கிட்ஸ் அடிச்சுக்கிற மாதிரி அப்போ நாங்க அடிச்சிக்கிட்டதா ஞாபகம் இல்ல. எனக்கு தெரிஞ்சு இலங்கை, இந்தியா கிரிக்கெட் டீம்னு மட்டும் தான் அடிச்சுக்கிட்டதா ஞாபகம்.
மத்தபடி,
இளையராஜாவும் ஒண்ணு தான் தேவாவும் ஒண்ணுதான்.
அஜித்தும் ஒண்ணு தான் விஜயும் ஒண்ணு தான்.
எஸ். பி. பி , ஷங்கர் மகாதேவன், ஹரிஹரன் எல்லாரும் ஒண்ணு தான்.
குமுதமும் ஒண்ணு தான் விகடனும் ஒண்ணு தான்.
சூரியனும் ஒண்ணு தான் ஷக்தியும் ஒண்ணு தான்
கோகுலமும் ஒண்ணு தான் சுட்டி விகடனும் ஒண்ணு தான்.
பிரின்சிபலோட பிரம்பும் ஒண்ணு தான், அம்மாவோட அகப்பக்காம்பும் ஒண்ணு தான்…
இந்த இத்துப்போன சோஷியல் நெர்வொர்க் என்னைக்கு வந்திச்சோ, அன்னைக்குத்தான் தான் அடிச்சுக்கிட்டு சாவ ஆரம்பிச்சிட்டோம்.
எது வந்தாலும் வாங்கி போட்டுக்கிட்ட 90’ஸ் கிட்ஸ்டா நாங்க!


 துவாரகன் இராமலிங்கம்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.