யாழ் சிறுப்பிட்டி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!


 யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் ​நேற்று (29) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதில் நல்லூர் நாயன்மார் கட்டு பகுதியை சேர்ந்த ஆரியரத்தினம் திருக்குமார் (வயது 32) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். நல்லூர் பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த இரட்ணசீலன் சுஜீவன் (வயது 24) என்பவர் படுகாயமயடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் வேகோ ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த பஸ் தரிப்பு நிலைய சுவருடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.