புளியடித்துறை ஆற்றில்நீராடச் சென்ற மாணவன் மரணம்!

 


நீராடச் சென்ற 16 வயது மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மீராவோடை புளியடித்துறை ஆற்றில் வைத்தே இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.

மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் எம்.எச். அர்ஹம் எனும் மாணவன் நண்பர்களோடு சேர்ந்து நீராடும் போதே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

நீரில் மூழ்கி மரணமடைந்த மாணவனை கல்குடா சுழியோடிகள் நீண்ட நேரமாக தேடி மீட்டெடுத்தனர்.

மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-நிருபர் குகதர்ஷன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.