திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கும் சென்றாா் அண்ணாமலை

 


இலங்கைக்கு சென்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர்  செவ்வாய்க்கிழமை (3) காலை 9.30 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

-அதனைத்தொடர்ந்து இந்திய அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் திருக்கேதீஸ்வர ஆலய கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டதோடு,திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினர்.

இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும்,குழுவினர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.