பற்சுகாதாரம் பேண சில வழிகள்!!

 


இரவு உறங்கும் முன் பல் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.


கொய்யாப்பழம், ஸ்ட்ரோபெரி பழத்தைச் சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.


இரவு தூங்குவதற்கு முன் ஆரஞ்சுப் பழத்தின் மேல் தோலை பற்களில் தேய்த்துவிட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பற்களின் மேற்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.


வெள்ளை எள்ளு விதையை, நன்றாகப் பொடி செய்து பற்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கிவிடும்.


கராம்புப் பொடியுடன் ஒலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.