அரசாங்கம் பலமிழந்து போய்விட்டது!

 


அவசரகால சட்டம் போன்ற நடவடிக்கைகள் தற்போதைய பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையே ஏற்படுத்தும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது தடவையாக அமுல்படுத்தி உள்ளார்கள். மக்கள் முழுமையாக அரசாங்கத்தை எதிர்க்கும் நிலைக்கு வந்திருக்கின்ற வேளையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து விடாமல் அனைத்து மாவட்டங்களிலும் பரவவிடாமல் நெருக்கடியை ஏற்படுத்தவும் தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

தேர்தலொன்று நடைபெற்றால் கிட்டத்தட்ட 30 ஆசனங்களை மட்டுமே பெறக்கூடிய நிலையிலேயே மிக மோசமாக அரசாங்கம் பலமிழந்து போய்விட்டனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நிதி அமைச்சு சார்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சர்வதேச நாணய நிதியம் உதவி செய்வதாக இருந்தால் அதற்கு அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அரசை ஆளும் அரசாங்கம் ஸ்திரத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை ஏற்படுத்தும்.

-நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.