7வயதுச் சிறுவன் சாதனை!!


 7 வயதுச் சிறுவனான சூரிய பிரசன்னா என்பவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். செந்தில்குமார், ராஜேஸ்வரி தம்பதிகளின்  மகனான இவர் சென்னையைச் சேர்ந்தவர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 சைக்கிள் ஓடிக்கொண்டே  ரூபிக் க்யூப் எனப்படும் கனசதுரத்தின்  219 முக்கோண க்யூப்களை வெற்றிகரமாக இணைத்துள்ளமைக்காகவே  இந்தச் சிறுவன் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 


ஏற்கனவே சைக்கிள் ஓடிக் கொண்டு ரூபிக் க்யூப்களை இணைத்தற்காக சூரிய பிரசன்னாவின் பெயர் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது எனினும் தற்போது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இவர் இடம்பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏழு வயதுச்சிறுவனுக்கு   பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.