பாடகி யொஹானி உருக்கம்!

 


‘‘இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. தாய் நாட்டு நலுனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’ என நாம் நாட்டுப் பாடகியான யொஹானி மும்பையில் வைத்து தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், தாய்நாட்டுக்கு 10 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி திரட்டி கொடுக்கும் திட்டத்தை பாடகி யொஹானி கடந்த மாதம் வெளியிட்டார். இதற்கு நிதியுதவி அளிக்கும்படி, தனது ரசிகர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

இவரது ‘மனிகே மஹே ஹித்தே’ என்ற சிங்கள பாடல் மிகவும் பிரபலமடைந்த நிலையில், தற்போது மும்பையில், இந்திய இசை கலைஞர்களுடன் பணியாற்றிவரும் நிலையிலேயே யொஹானி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் நடக்கும் சம்பவங்களால் மனதுடைந்து போயுள்ளேன். 

நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நிதியுதவி மட்டும் அல்ல மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பது முக்கியம்.

 எனது நாட்டு மக்களுக்கு உதவ, எனது குரலை பயன்படுத்துவேன். நான் எனது நாட்டின் மீது அதிக பற்று வைத்துள்ளேன். 

நான் மும்பையில் இருந்தாலும், எனது குடும்பம், நண்பர்கள், என்னுடைய இசைக்குழுவினர் எல்லோரும் இலங்கையில்தான் உள்ளனர். எனது தாய் நாட்டின் நலனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’ என யொஹானி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.