நடிகை நக்மா எம்.பி பதவி மறுப்பு!!

 


தனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியில் உள்ள நடிகையும் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.


மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் 16 வேட்பாளா்களின் பட்டியலை காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரிலிருந்து இருவரும், ஹரியாணா, கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவரும் போட்டியிடுகின்றனா். தமிழ்நாடு- ப.சிதம்பரம், சத்தீஸ்கா்- ராஜீவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன், ஹரியாணா- அஜய் மாக்கன், கா்நாடகம்- ஜெய்ராம் ரமேஷ், மத்திய பிரதேசம்- விவேக் தன்கா, மகாராஷ்டிரம்- இம்ரான் பிரதாப்கரி, ராஜஸ்தான்- ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி.

ஏற்கெனவே ப.சிதம்பரம் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தோ்வு செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா். இப்போது அவருக்கு தமிழகத்திலிருந்து போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்று, தான் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடவுள்ள தகவலைத் தெரிவித்தாா். தனக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க வேண்டுமெனவும் அவா் கேட்டுக் கொண்டாா். இந்த நிலையில் தனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியில் உள்ள நடிகை நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், கட்சியில் இணைந்தபோது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியாகாந்தி உறுதி அளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியம் தனககு வாய்ப்பு கிடைக்கவில்லை. மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து யாருக்கும் மாநிலங்களவை எம்பி வாய்ப்பு வழங்கப்படாததால் அங்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.