சனத் ஜெயசூரிய விடுத்துள்ள எச்சரிக்கை!!

 


இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைக்குத் தீர்வு காணாவிட்டால் பெரும்  அபாய  நிலைமை  ஏற்படும் என  சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் அவர் தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்ற முறை மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்தால், அராஜகம் தலைதூக்கும் என்று ஜெயசூரிய எச்சரித்துள்ளார்.  தமது அறிக்கையில், முன்னாள் கிரிக்கெட் வீரர், விஸ் கலிஃபாவை (wiz Khalifa) மேற்கோள் காட்டியுள்ள அவர், முதல் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாவது தவறிலிருந்து நாங்கள் ஒருபோதும் பாடம் கற்றுக் கொள்ள மாட்டோம். கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் மட்டுமே அது நம்மைத் தாக்கும் எ்னவும்


மக்கள் தங்கள் ஜனநாயக அபிலாஷைகளை அடைய சர்வதேச சமூகம் உதவ வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


 மேலும் மக்களுக்குப் பொருத்தமான தீர்வைத் தயாரிப்பதற்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.