வட்டுவாகலில் தமிழர்களின் உடலங்களை காணிக்கையாக்கிய நீங்கள், இன்று வெசாக்கூடுகளை அலங்காரம்!

 


அன்பு மகளின் உடலைக்கூட காணவில்லை..

சிலவேளை அது வட்டுவாகல் பாலத்து நீரேரியில் மிதந்து கொண்டிருக்கலாம்..

அம்மாவைக் காணவில்லை..

சிலவேளை அம்மா பிணமாக இதே வட்டுவாகல் நீரேரியில் மிதந்துகொண்டிருக்கலாம்..

அப்பாவைக்கூட காணவில்லை..

முகம் சிதைந்து அதோ, அந்த கடலேரியில் மிதந்து செல்வது அப்பாவின் உடலமாகக்கூட இருக்கலாம்..


உறவுகளின் உலங்களைக்கூட தொலைத்துவிட்டு, உயிரிருந்தும் உடலமாக இதோ, இதே வட்டுவாகல் பாலத்தை எம் உறவுகள் தாண்டி இன்றுடன் 13 வருடங்களாகிவிட்டது..


அன்று புத்தபெருமானிற்கு தமிழர்களின் உடலங்களை காணிக்கையாக்கிய நீங்கள், இன்று வெசாக்கூடுகளை அலங்கரமாக அமைத்து ஆனந்தம் கொண்டாடுகின்றீர்கள்..


நீங்களும், உங்கள் புத்த பெருமானும் இன்னும் பசியுடன் இருப்பதை நாமறிவோம்..

உங்கள் கொடியிலுள்ள சிங்கத்திற்கு பசிக்கும்போதெல்லாம் அதற்கு தமிழர்களின் உடலங்களை காணிக்கையாக்கும் நவீன துட்டகைமுனுக்கள் நீங்கள்..


நாளையும் இதேநிலைதான்..


நீங்கள் ஒருபோதும் மாறப்போவதில்லை..

நீங்கள் வேறு.,

நாங்கள் வேறு…


- பிரதி செய்யப்பட்டது -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.