சீனத்தூதுவர் விஜயம் - சர்வதேச விவகார அலகும் திறந்துவைப்பு!!📸

 


வந்தாறுமூலை - கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இலங்கைக்கான சீனத்தூதுவர் விஜயம் - சர்வதேச விவகார அலகும் திறந்துவைப்பு வைபவம் இடம்பெற்றது.

வந்தாறுமூலை - கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இலங்கைக்கான சீனத்தூதுவர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (26) காலை 09.00 மணியளவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டடிருந்தனர்.


இலங்கைக்காக சீனத்தூதுவர் உள்ளிட்ட குழுவை கிழக்குபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட சிரேஸ்ட விரிவுரையாளர்கள்  மலர் மாலை அணிவித்து கலாசாரத்துடன் கூடிய வரவேற்புடன் வரவேற்றனர். 


கிழக்குப்பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விவகாரப் பிரிவு (International Affairs Division) இதன் போது சீனத்தூதுவரால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 


பின்னர் சீனத்தூதுவருக்கும் துணைவேந்தர் உள்ளிட்ட சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்குமிடையில் கலந்துரையாடலொன்று பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. 


அத்தோடு குறித்த கலந்துரையாடலின் முடிவில் பல்கலைக்கழகத்தினால் சீனத்தூதுவர் மற்றும் அவரது பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன், சீனத்தூதுவரால் பல்கலைக்கழக நிருவாகத்திற்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.