கடற்கொந்தளிப்பு காரணமாக விவசாயிகள் கவலை

 


கடற்கொந்தளிப்பு காரணமாக   கல்முனை விவசாய விரிவாகல் பிரிவில் பயிரிடப்பட்ட உளுந்து நிலக்கடலை என்பன பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


'சௌபாக்கியா' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உப உணவு பயிர் செய்கையை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீரின் வழிகாட்டலில் கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தின் பிரிவுக்குட்பட்ட கல்முனை அன்பு சகோதர இல்லத்தில் சுமார் நான்கு ஏக்கரில் நிலக்கடலை பயிரிடப்பட்ட நிலையில் தீடிரென ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் உட்புகுந்ததால் சுமார் அரை ஏக்கரில் பயிரிடப்பட்ட  நிலக்கடலை பயிர் பாதிப்படைந்ததாக விவசாயி எஸ்.நல்லதம்பி தெரிவித்தார்.  

இந் நிலையில் குறித்த கல்முனை அன்பு சகோதர இல்லத்திற்க்கு சொந்தமான மற்றுமொறு நிலப்பரப்பில் சுமார் ஒன்றரை ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து செய்கைக்குள்ளும் கடல் நீர் உட் புகுந்த நிலையில் முற்றாக உளுந்து பயிர் பாதிப்படைந்ததாக விவசாயி கே.கிருபாகரன் தெரிவித்தார்.


இதே வேளை குறித்த பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அம்பாரை  மாவட்ட மறு பயிர் செய்கை விவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார்இகல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தின் பிரதம போதனாசிரியர் எஸ்.கிருத்திகாஇகல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாய போதனாசிரியர் என்.யோகலக்ஷ்மி ஆகியோர் வியாழக்கிழமை  (12)  குறித்த இடத்துக்கு கள விஜயம் செய்து விவசாயிகளுக்கு தேவையான வழிகாட்டலையும்இஆலோசனைகளையும் மேற்க்கொண்டனர்.


இதேவேளை உளுந்துஇநிலக்கடலை என்பன சுமார் 35 நாட்க்கள் பயிரிடப்பட்ட நிலையில் மேலும் சுமார் ஒன்றரை மாதத்திற்க்குள் அறுவடை செய்யப்படவிருந்த நிலையில் இவ் கடற்கொந்தலிப்பு காரணமாக பயிரிடப்பட்ட பகுதிகளுக்கு கடல் நீர் உட்புகுந்ததாக விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.


அத்துடன் கடல் நீரானது  குறித்த பயிரிடப்பட்ட பகுதிகளில் தேங்கி நிற்பதை காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.