பிரிட்டன் தலையிட்டு சுவீடன், பின்லாந்து தாக்கப்பட்டால் பாதுகாக்கும்!


 இரு நாடுகளின் தலைவர்களுடன் ஜோன்சன் பாதுகாப்புப் பிரகடனம்


சுவீடன், பின்லாந்து நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இரு நாட்டுத் தலை

வர்களுடனும் பாதுகாப்புப் பிரகடனங்களைச் செய்துள்ளார். இவ்விரு நாடுகளும் தாக்குதலுக்கு இலக்காகும் பட்சத்தில்

லண்டன் உடனடியாகத் தலையிட்டுப் பாதுகாப்பதை அந்தப் பிரகடனங்கள் உறுதிப்படுத்துகின்றன. பின்லாந்து

அதிபர் சவுலி நினிஸ்டோ(Sauli Niinistö) சுவீடிஷ் பிரதமர் மாக்டலேனா அண்டர்சன் (Magdalena Anderson) ஆகிய இருவரையும் தனித்தனியே சந்தித்த பொறிஸ் ஜோன்சன், பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கினார்.


பால்டிக் பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துவருகிறது.ரஷ்யாவோடு எல்லையைக் கொண்ட பின்லாந்தும் பால்டிக் கடலில் கேந்திர முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைந்துகொள்வதற்கான பரிசீலகளில் ஈடுபட்டுள்ளன. நீண்ட காலமாகப் போர்களின் போது எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலை (wartime neutrality) வகித்து வந்த இவ்விரு நாடுகளும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்

பையடுத்து நேட்டோ அமைப்பில் சேர்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அவ்வாறு மேற்குலக கூட்டணியுடன் இணைந்தால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்து

வருகிறது. அதனால் இவ்விரு நோட்டிக் நாடுகளி லும் முன்னொருபோதும் இருந்

திராத பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை நீடித்துவருகிறது.


(படம் : சுவிடிஷ் பிரதமர் மாக்டலேனா அண்டர்சனுடன் பொறிஸ் ஜோன்சன்)

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.