செங்குந்த சந்தையில் மரக்கறி விற்பனை செய்வோர் இன்று சந்தைக்கு வெளியே!
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு செங்குந்த சந்தையில் மரக்கறி விற்பனை செய்வோர் இன்று சந்தைக்கு வெளியே வைத்து மரக்கறி செய்துவருகின்றனர். இது குறித்து மரக்கறி விற்பனை செய்வோரிடம் கேட்டபோது சந்தை கட்டட வெளிப்புற கடைகளை நடத்துவோர் மரக்கறி வகைகளை விற்பனை செய்வதால் தமது வியாபாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்தும் வெளி கடைகளில் மரக்கறி விற்பனையை நிறுத்தவில்லை.
இந்நிலையில் தாம் சந்தைக்கு வெளியே வந்து விற்பனை செய்வதாகவும் இதற்கு முடிவு மாநகர சபை அதிகாரிகள் எடுக்காவிடின் இவ்வாறே விற்பனை தொடரும் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தையில் நீர் வசதியும் உரிய முறையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை