யாழிற்கு பெருமை சேர்த்த சிறுவர்கள்!


இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட STR Cool Tennis இன் 10 வயதிற்க்கு உட்ப்பட்ட தனி நபர்களுக்கான டென்னிஸ் போட்டிகளில் யாழ்.மாவட்ட வீரர்கள் முதன் முறையாக தமது வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.

கடந்த யூன் 10ஆம்,11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தில் இப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் 8 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ஜெ.நர்ஸ்வின் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன்போது 7 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ரா.ஆரோன் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

மேலும் 7 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் யாழ் இந்து ஆரம்பப்பாடசாலை மாணவி வி.அஸ்விதா இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.  

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.