சட்டத்தரணி சுகாஸ் வீட்டிற்குச் சென்று பயங்கரவாத தடுப்பு ப்பிரிவினர் அச்சுறுத்தல்!

 


சர்வதேச மாநாடு ஒன்றிற்காக எமது சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் 10 நாள்ப்பயணமாக சென்றிருக்கும் நிலையில், இன்று காலையில் அவரது வீட்டிற்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவினர் (TID) அவரது குடும்பத்தினரிடம், அவர் எங்கு சென்றிருக்கிறார் அவரை விசாரிக்க வேண்டுமென அச்சுறுத்தியுள்ளனர்.

PTA கைதுகள், காணி அபகரிப்புகள், சிங்கள பௌத்த மயமாக்கல் என இலங்கையில் தமிழர்களுக்கெதிரான பல இனஅழிப்புச் செயற்பாடுகள் பௌத்த சிங்கள பேரினவாத அரசுகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அந்த விடயங்களை சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்துவதனை தடுக்கும் நோக்கிலேயே இந்த அச்சுறுத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.