நீர் கொழும்பில் வெடிபொருட்கள் மீட்பு!!

 


நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றில் வெடிபொருட்கள் இருப்பதாக நம்பப்படும் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


தேடுதல் மற்றும் மர்ம பொதியை ஆராய்வதற்காக குறித்த வீதியும் அதனை அண்மித்த பகுதியும் தற்காலிகமாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.


குறித்த பொதியில் இருந்த கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார், STF மற்றும் SLAF அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.