துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் துப்பாக்கி இயங்கியதால் உயிரிழப்பு!
நெலுவ பகுதியில் காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் ஒருவர், துப்பாக்கி இயங்கியதால் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மொறவக்க பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை