இஸ்ரேல் பாதுகாப்பு படையினருடன் மோதலில் மூவர் உயிரிழப்பு

 


இஸ்ரேல் படையினருடனான மோதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காஸா முனைப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது திடீர் தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு கரைப் பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது.

இந்த நிலையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையின் ஜெயின் பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். அப்போது அங்கு வந்த காரை சோதனை முயற்சி செய்தவர் ஆனால் கார் நிற்காமல் சென்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த மோதலின் போது காரில் வந்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் இந்த மோதலின்போது 12 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்ட 3 பேர் பயணித்த காரில் இருந்து 3 துப்பாக்கிகள் கை பெற்றதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.