பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக 3 நாட்களாக காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்


 வீதியை விட்டு விலகிய லொறி மோதியதில்,

பெட்ரோல் பெற 3 நாட்களாக காத்திருந்த நபர் உயிரிழப்பு...


மத்துகம -ஸஅகலவத்தை எரிபொருள் நிலையத்தில் தமது மோட்டார்

 சைக்கிளுக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக 3 நாட்களாக காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நேற்று முன்தினம் இரவு லொறியொன்று மோதியதில் இவ்வாறு எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் பதுரலியவை சேர்ந்த 55 வயதான இத்தகொட ஹேவகே ஜகத் என்பவர் உயிரிழந்துள்ளார்.


பதுரலியவில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.