உழவு இயந்திரம் தடம் புரண்டதில் இருவர் ஸ்தலத்தில் பலி - மாவடி ஓடையில் சம்பவம்


கரடியனாறு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாவடிஓடை பிரதேசத்தில் செலுத்திச்சென்ற உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் சம்பவ இடத்தில் இருவர் பலியான சம்பவம்  இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த கண்ணப்பர் மூர்த்தி (வயது 53) இரு பிள்ளைகளின் தந்தை மற்றும் பாரதியார் வீதி கொம்மாதுறையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான தம்பிப்போடி சீவரெத்தினம் (58 வயது) என்பவர்களே சம்பவ தினத்தன்று பலியானவர்கள்.


இவர்கள் நீண்ட நாட்களாக குறித்த பிரதேசத்தில் கச்சான் செய்னை பண்ணி வருவதாகவும் சம்ப தினத்தன்று அறுவடை செய்த கச்சானை வந்தாறுமூலை பிரதேசத்தில் கொடுத்துவிட்டு குறித்த இடத்திற்கு திரும்பிச்சென்று கொண்டிருக்கும் போது உழவு இயந்திரம் மற்றும் இளுவைப்பெட்டி கட்டுப்பட்டை இழந்து தடம் புரண்டதில் சம்பவ இடத்தில் இருவரும் பலியானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விரசணைகளின் போது தெரியவந்துள்ளது.


கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைந்தார். மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.