உயர் தர மாணவர்களுக்கான அறிவிப்பு!!

 


இன்று முதல் 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் ஜுலை மாதம் 9ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது0

.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 44 பரீட்சை மையங்களில், 24,950 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளனர். பரீட்சைக் கடமைகளில் 1,540 பணிக்குழாமினர் ஈடுபடவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த நேரத்தில் மாணவர்கள் பரீட்சைக்குச் சமூகமளிப்பதற்கு பெற்றோர்கள் நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறும், ஏனைய மாணவர்கள் வரமுடியாத நிலையில் இருப்பின் அவர்களுக்கு உதவுமாறு ம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.