இலங்கையில் கடன் அட்டை பாவனையாளர்களுக்கு வெளியான தகவல்!
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை சுமார் 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் அட்டைகள் மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி வீத எல்லையை கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி முதல் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை இதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தது.
இதனையடுத்து, கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் 18 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதமாக அதிகரித்தது. எனினும், தற்போது அது 30% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை