திர்வரும் நாட்களில் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்!


 திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைக்காமையால் எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 


அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது  என  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  


நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் வரை பொது போக்குவரத்து, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும்  வாரத்தில் ஒரு சில பெட்ரோல் நிலையங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல்  விநியோகிக்கப்படும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று அமைச்சர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.


இந்த வாரமும் அடுத்த வாரமும் இலங்கைக்கு வரவிருந்த பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் தாங்கிகளின் வருகைக்கான திகதியை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.