கடும் போட்டியில் பொதுஜன பெரமுன பதவி!


முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறதாக கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர்கள் பலர் இந்தப் பதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேவேளை ஏனைய வெளியாட்களும் இப்பதவியைப் பெற ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பதவிக்கு பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், சட்ட நிலைமை காரணமாக அது சிக்கலாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.