மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்

 12.06.2022அன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் மகிழடித்தீவு மற்றும் அரசடித்தீவு கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் அங்கிருந்த மக்களில் 220 பேரை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர். அதன்பின்னர் இறந்த உடல்களை ரயர் போட்டு அரைகுறையாக எரித்தனர். அத்துடன் அக்கிராமத்திலிருந்த 400க்கும் மேற்பட்ட வீடுகள் சிறிலங்கா இராணுவத்தினரால் தீவைத்து எரிக்கப்பட்டது.

இப்படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. இந்நினைவேந்தலில் பொதுமக்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.