அவசர வழக்குகளுக்கு மட்டுமே அனுமதி!!
அவசர வழக்குகளுக்கு மாத்திரம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அனைத்து நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வழக்கை ஒத்திவைப்பது குறித்தும், சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்தும் சட்டத்தரணிகள் சங்கங்களுடன் விவாதித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது.
கருத்துகள் இல்லை