பொது மக்களுக்கான அறிவிப்பு!!

 


பிரதேச செயலகங்கள் ஊடாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் காணி பதிவு சேவைகள் எதிர்வரும் 10 நாட்களுக்கு திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாத்திரமே இடம்பெறும்
* என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் *காலை 8.30 முதல் பிற்பகல் 4.00 வரை இந்த சேவைகள் இடம்பெறவுள்ளதாக* பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், *பதிவாளர் திணைக்களத்தின் பத்தரமுல்லை சுஹுருபாய வளாகத்தில் அமைந்துள்ள கிளை அலுவலகம் மற்றும் குருணாகலை, கண்டி, மாத்தறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கிளை அலுவலகங்கள் உரித்தான பிரதேச செயலகங்களின் மாவட்ட பதிவாளர் பிரிவு வாரத்தின் 5 நாட்களுக்கு வழமை போல இடம்பெறும்* என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, *ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை அனைத்து வாரங்களிலும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் தபால் மற்றும் உப தபால் நிலையங்களை திறந்து வைக்க* தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.