கொழும்பு வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 


கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான வெள்ளவத்தையின் கடற்கரை வீதி பகுதியில் யுவதியொருவரிடமிருந்து பணம் மற்றும் ஏரிஎம் அட்டை என்பன பறித்து செல்லப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முச்சக்கரவண்டியொன்றில் பயணித்த யுவதி அருகில் இருந்த ஏரிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பியுள்ளார்.

இதன்போது வேகமாக மோட்டார்சைக்கிளொன்றில் வந்த இருவர் யுவதியிடமிருந்து பணத்தையும், ஏரிஎம் அட்டையையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த போதும் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தை எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறான முறைப்பாடு எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

எனினும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென சமூக அவதானிகள் மக்களை எச்சரித்துள்ளனர். 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக இவ்வாறான சூழ் நிலை எழுந்துள்ளதாக கூறும் மக்கள், இனி வரும் நாட்கள் மிக மோசமடைவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கூறுகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.