சட்டவிரோதமான முறையில் டீசலை பதுக்கியவர் கைது!!
சட்டவிரோதமான முறையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கொட்டாவ, மகும்புரவில் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் மாடியில் 500 லிற்றர் குடிநீர் இறப்பர் தாங்கியிலும், அவரது வணிக வளாகத்தில் மற்றொரு தாஙகியிலும், இரண்டு பெரல் டீசலும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்துகள் இல்லை