கைமாறுகிறது எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!!

 


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வேறு நிறுவனங்களிடம் கையளிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது..

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், 1,690 நிரப்பு நிலையங்கள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அவற்றை வேறு நிறுவனங்களுக்கு மாற்ற முன்மொழிந்துள்ளதாகவும் கூறினார்.

அத்தோடு அவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றுக்கொள்பவர்களுக்கு நிபந்தனைகள் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடன் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்களுக்கு தங்கள் நிறுவனங்களிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.