இன்றைய தங்க விலை நிலவரம்!


இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறிய மாற்றங்களே பதிவாகி வருகின்றன. அந்தவகையில் இன்றைய தினம் கொழும்பு - செட்டியார் தெருவில் 24 கரட் தங்க விலை 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் நேற்று முன் தினம் 24 கரட் தங்கத்தின் விலை 189,700 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 173,950 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. அதேபோல் நேற்றைய தினம் 24 கரட் 188,750 ரூபாவாகவும், 22 கரட் 173,100.00 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் தங்க விலையானது சர்வதேச சந்தையில் சரிவினை கண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அவுன்ஸிற்கு 12.25 டாலர்கள் குறைந்து, 1,836.15 டாலர்களாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளியின் விலையும் தற்போது அவுன்ஸிற்கு 1.17% குறைந்து, 21.435 டாலர்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.