அமெரிக்க குழு - ஜனாதிபதி சந்திப்பு!!

 


இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கும் கலந்துகொண்டார்.

இதன்போது வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்து ருவிட்டரில் ஜூலி சுங், “இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க இது ஒரு சவாலான நேரம். இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் நீண்டகாலப் பங்காளித்துவத்தை வழங்குகின்றோம்” – என்று குறிப்பிட்டுள்ளார்..


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.