ரணிலுடன் அமெரிக்க குழு பேச்சு!!

 


இலங்கையில் நிதி முகாமைத்துவத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் தலைமையிலான குழுவினர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இலங்கை அரசுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜதந்திரக் குழு தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கும் கலந்துகொண்டார்.

மேலும், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.சமரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.