தேசிய கிரிக்கெட் அணிக்கு கிளிநொச்சி மாவட்ட வீராங்கனை கலையரசி தெரிவு! 📸

 


19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு கிளிநொச்சி மாவட்ட வீராங்கனை கலையரசி தெரிவு! 


கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்விக்கற்கும்  சதாசிவம் கலையரசி என்ற மாணவி இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கலையரசிக்கு எமது மகிழ்வான வாழ்த்துக்கள்.


11வயதில் துடுப்பாட்டத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த கரையரசி கோட்டம் முதல் தேசியம் வரை பல மட்டங்களில் போட்டிகளில் பங்குபற்றி தனது திறமையை வெளிப்படுத்தி வந்த ஒரு இளம் வீராங்கனை. கலையரசியின் பந்து வீச்சு மற்றும் சிறந்த துடுப்பாட்டத்தினால் இன்று தேசிய அணிக்கு தெரிவாகி உள்ளார்.


துடுப்பாட்டம் மட்டும் கலையரசியின் திறமை அல்ல ஏல்லே, உதைபந்து, கரப்பந்து,கபடி,  தடகள போட்டி என அனைத்திலும் திறமை காட்டும் ஒரு வீராங்கனை.


கலையரசி இந்த படிக்கல்லை அடைய ஊக்கப்படுத்திய பாடசாலை சமூகத்தினர், பெற்றோர் மற்றும் மாணவியை பயிற்றுவித்த பாடசாலை பயிற்றுவிப்பாளர் தர்சன் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.


#Kilinochchi #Cricket #Under19 #Woman’s #Team



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.