லிட்ரோ எரிவாயு நிறுவனம் உலக வங்கியுடன் போட்ட ஒப்பந்தம்!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதற்கு உத்தரவாதமளித்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக வங்கியுடன் லிட்ரோ எரிவாயு நிறுவனம் போட்ட  ஒப்பந்தம் | Litro Gas Company Enters Agreement World Bank

அதன்படி, லிட்ரோ கேஸ் நிறுவனமானது, 90 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான 100,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை கொள்முதல் செய்துள்ளது.

இதற்காக உலக வங்கி 70 மில்லியன் டொலர்கள் நிதியுதவி அளித்துள்ளது, மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.