முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் சிரமதான பணி!📸

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் சிரமதான பணி 


உலக சுற்றுச் சூழல் தினமான இன்று முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது


உ லக சுற்று சூழல் நாளான இன்று 05.06.2022  முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் ஒன்று கூடிய பொதுமக்கள் மற்றும் பொலீசார்,அருட்தந்தையர்கள்  இளைஞர் யுவதிகள  . கடற்கரையினை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.


கரித்தாஸ்,கியூடெக் அரச சாற்பற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த சுத்தம் செய்யும் நிகழ்வில் அருட் தந்தையர்கள் முல்லைத்தீவு,கிளிநொச்சியினை சேர்ந்த மக்கள்,முல்லைத்தீவு பொலீசார் ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள்.


சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க மக்களுக்கு விளிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த சுத்தம் செய்யும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


சுற்றுலா கடற்கரையில் உள்ள பொலித்தீன் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் சுமார் ஒரு மணி நேரம் ஈடுபட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.