விரைவில் புதிய பிரதமர்!!

 


இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் புதிய பிரதமரின் கீழ் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல அரசியல் கட்சிகள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுயேட்சை கட்சிகளுக்கு இடையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவிக்காக பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், சர்வதேச கட்சிகள் இணைந்து தயாரிக்கும் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீக்கப்பட்டு உரிய காலப்பகுதியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய பிரதான அரசியல் கட்சிகளின் நோக்கமாக உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் தேர்தலுக்குச் செல்ல முடியாத நிலையில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே புதிய வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி வெளிநாட்டுக் கடன்களையும் உதவிகளையும் விரைவில் பெற்று நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி மிகக்குறுகிய காலத்தில் தேர்தலை நடத்துவதே அரசியல் கட்சிகளின் நோக்கமாக உள்ளதென தெரியவந்துள்ளது..


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.