பெரு வாகனங்களின் வரிசைகள் மேலும் நீடிக்கும்!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்றும்,  இதானால் நாட்டில் எரிபொருள் வரிசைகள் மேலும் நீடிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 350 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 800 மெட்ரிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது.

எனினும், அந்த அளவுகள் அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட வரிசை

இதேவேளை, இன்றைய தினமும் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

எதிர்வரும் நாட்களில்  வரிசைகள் மேலும் நீடிக்கும்!

குறிப்பாக கொழும்பின் பல பகுதிகளிலும் மக்கள் இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றதாகவும் கூறப்படுகின்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.