O/L மாணவியிடம் கீழ்த்தரமாக நடந்துக் கொண்ட பரீட்சை கண்காணிப்பாளர்!

 


க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


அநுராதபுரம் ஹிதோகம பாடசாலையின் பரீட்சை நிலையத்தில் கடந்த 25ஆம் திகதி பரீட்சைக்குத் தோற்றிய மாணவியொருவர் கண்காணிப்பாளரால் இவ்வாறு பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மாணவி தனது தாயுடன் சேர்ந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதன்படி கண்காணிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை பதவியில் இருந்து இடைநிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை மறைத்தது தொடர்பாக பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.