கைதியொருவர் உயிரிழந்த தொடர்பில் 4படை வீரர்கள் கைது!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதி ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக கடந்த 28ஆம் திகதி இரவு முதல் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் கடந்த 29ஆம் திகதி காலை சுமார் 600 கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தின் இரண்டு பிரதான கதவுகளையும் உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்களில் ஒரு குழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய ஏனைய கைதிகளை கண்டுபிடிப்பதற்காக இராணுவமும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை