குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

 


ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.


குறித்த குடும்பஸ்தர் தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்த பின்னர் கடலுக்கு செல்ல முற்பட்ட வேளையே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த நபர் மரணித்த பின்னர் இன்னொரு மீனவர் அவ்விடத்திற்கு வந்து அவரது சடலத்தினை கண்டுள்ளார். இந்நிகழ்வில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஐஸ் பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

-நிருபர் ரமணன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.